Wednesday, February 11, 2009

உப்பின் உபத்திரவங்கள்


பொதுவாகவே எல்லோரும் நிறையவே ஆரோக்ய விழிப்புணர்ச்சியுடன் செயல்படுகிறோம். கலோரி கான்ஷியசாகவும் மாறிவிட்டோம். மாறி வரும் இந்நிலையைப் பார்த்து பெருமையாக இருந்தாலும், ஒரு சிறு பிரச்சனை எங்கோ இருப்பதை இன்னும் நாமெல்லாம் சரிவர உணரவில்லை. அதுதான் நம் உணவில் சேர்க்கும் உப்பு. நம் தின்பண்ட சுவை கூட்டும் உப்பு நம் ஆரோக்யத்திற்கே வில்லனாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. விளைவு, ஸ்ட்ரோக், மாரடைப்பு முற்றுப்புள்ளியாக கடைசியில் இறப்பு.

ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?

** 0-6 மாத குழந்தைகள் ஒரு கிராம் உப்பை விடக் குறைவாக.
** 7 லிருந்து 12 மாத குழந்தைகள் 1 கிராம்.
** 1 முதல் மூன்று வருடக் குழந்தைகள் 2 கிராம்.
** 4 முதல் 6 வருடக் குழந்தைகள் 3 கிராம்.
** 7 லிருந்து 10 வருடக் குழந்தைகள் 5 கிராம்.
** பெரியவர்கள் 6 கிராம், அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு.

உணவில் அடங்கியுள்ள உப்பை அளப்பது கடினமாது. ஏனென்றால், காய்கறிகளிலும் பழங்களிலும் கூட உப்பு அடங்கியுள்ளது. ஆனால் கடைகளிலிருந்து வாங்கிய உணவுப் பண்டங்களில் ஒரு சிறு அட்டவணையில் உப்பின் அளவு சோடியம் என்ற பெயரில் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி 0.5 கிராமுக்கு அதிகமாக சோடியம் அடங்கிய 100 கிராம் உணவுப் பொருட்கள் ஆரோக்யத்திற்கு அவ்வளவு உகந்ததல்ல.

பதப்படுத்தப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட மாமிசம் எல்லா வகையான பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைகள், ஸ்நாக்ஸ், ப்ரெட் மற்றும் பிஸ்கெட் வகைகள், கடையில் வாங்கும் ஊறுகாய் வகைகள் உணவுக் காப்பினியான சோடியம்-பை-கார்பனேட் என அறியப்படும் பேக்கிங் சோடா, MSG என அறியப்படும் உணவுக்கு சுவை கூட்டும் மோனோ சோடியம் க்ளூக்கமேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டாலும் பெண்களின் கால்ஷியத்தை அழித்து எலும்புகளை பலவீனமாக்கி, ஆஸ்டியோபொரோஸிஸிடம் ஒப்படைத்துவிடும்.

6 comments:

இராகவன் நைஜிரியா said...

// உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டாலும் பெண்களின் கால்ஷியத்தை அழித்து எலும்புகளை பலவீனமாக்கி, ஆஸ்டியோபொரோஸிஸிடம் ஒப்படைத்துவிடும்.//


இதுக்கு மேல ஒரு மனுஷன பயமுறுத்த முடியாதுங்க..

இராகவன் நைஜிரியா said...

இந்த word verification ஐ எடுத்து விடுங்க.

அதுக்கு பதிலா கமெண்ட் மாடரேஷன் வைத்துக் கொள்ளுங்க...

தமிழில் தட்டச்சு செய்து விட்டு, பின் ஆங்கிலத்து மாறி ... ரொம்ப கஷ்டமுங்க..

"ஸ்ரீரங்கத்து தேவதை " said...

yup, updated.......

kargil Jay said...

I am surprised you have written this much, with this much maturtiy in your childhood ( <25 yrs old). Whatever you mentioned about Salt is true. உன் சமுதாய அக்கறை என்னை வியக்க வைக்கிறது. சமுதாயத்தின் மீது அன்பு காட்டக் காரணம் இயல்பிலேயே அன்பால் ஆனதாலா ?

http://chidambarampoemjay.blogspot.com/

ஞாபகம் வருதே... said...

இனி உப்பு சப்பு இல்லாத விஷயம் என சொல்லமுடியாது.

/இதுக்கு மேல ஒரு மனுஷன பயமுறுத்த முடியாதுங்க..//
ஆமோதிக்கிறேன்.

வண்ணத்துபூச்சியார் said...

பயனுள்ள பதிவு.

வாழ்த்துகள்.

இந்த நேரத்தில் "Salt of This Sea" என்ற பாலஸ்தீன திரைப்படம் பற்றிய பதிவையும் உலக சினிமா பதிவுகளையும் காண அன்புடன் அழைக்கிறேன்.


நன்றி